Thursday, August 27, 2015

மெய்ஞ்ஞானப் புலம்பல் - காப்பு

காப்பு

முக்திதரும் ஞான மொழியாம்  புலம்பல் சொல்ல
அத்தி முகவன்தன் அருள் பெறுவது எக்காலம்?

பாடல்

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டெரித்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவ தெக்காலம்?

நீங்காச் சிவயோக நித்திரை கொண்டே இருந்து
தேங்காக் கருணைவெள்ளம் தேக்குவதும் எக்காலம்?

தேங்காக் கருணைவெள்ளம் தேங்கியிருந் துண்பதற்கு
வாங்காமல் விட்டகுறை வந்தடுப்ப தெக்காலம்?

ஓயாக் கவலையினால் உள்ளுடைந்து வாடாமல்,
மாயாப் பிறவி மயக்கறுப்ப தெக்காலம்?

மாயாப் பிறவி மயக்கத்தை ஊடறுத்துக்
காயா புரிக்கோட்டை கைக்கொள்வ தெக்காலம்?

சேயாய்ச் சமைந்து செவிடூமை போல்திரிந்து
பேய்போல் இருந்துஉன் பிரமைகொள்வ தெக்காலம்?

பேய்போல் திரிந்து, பிணம்போல் கிடந்த பெண்ணைத்
தாய்போல் நினைத்துத் தவம்முடிப்ப தெக்காலம்?

கால்காட்டிக் கைகாட்டிக் கண்கள் முகம்காட்டி
மால்காட்டும் மங்கையரை மறந்திருப்ப தெக்காலம்?

பெண்ணினல்லார் ஆசைப் பிரமையினை விட்டொழித்துக்
கண்ணிரண்டும் மூடிக் கலந்திருப்ப தெக்காலம்?

கடவுள் மட்டுமே நிரந்தரமானவர்

செல்வம், புகழ், பதவி  இவற்றினால் சிலர் அகங்காரம் கொள்கின்றனர். இவையெல்லாம் வெறும் இரண்டொரு நாட்களுக்குத்தான். எதுவும் நம்முடன் வரப்போவதில்லை. கடவுள் மட்டுமே நிரந்தரமானவர்.

Saturday, August 15, 2015

ஒழுக்கம்

ஒழுக்கம்  என்பது தனக்கோ, பிறர்க்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, உணர்ச்சிக்கோ, துன்பம் விளைவிக்காது நன்மையே செய்கின்ற ஒன்றே ஒழுக்கம் என்பதாகும்.

சமுதாயத்தில் எந்த உயிர்களுக்கும் துன்பம் விளைவிக்காமல் தனக்கோ அல்லது இயற்கைக்கே கூட ஊறு விளைவிக்காமல் வாழும் ஓர் உயர் நெறியே ஒழுக்கம் என்பதாகும்.

Thursday, August 6, 2015

Kayakalpa Song (காயகல்ப பாடல், சிவவாக்கியர்)

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல்
விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே

-சிவவாக்கியர்

Wednesday, August 5, 2015

அறிவென்னும் ஆயுதம்

எல்லா சிக்கல்களுக்கும் முடிவு இயற்கையிலேதான் உண்டு. ஒவ்வொரு சிக்கலையும் வெற்றி கொள்வது தெளிந்து தேர்ந்த அறிவேயாகும்.

அத்தகைய அறிவு எல்லோரிடமும் இருக்கிறது. அதை தூண்டி, அதையே வலுவுள்ள ஆயுதமாகக் கொண்டு கவலைகளை ஒழிக்க வாழ்வில் அமைதியும், மகிழ்ச்சியும் பெறுவோம்.

Friday, July 31, 2015

Meeting of Swami Vivekananda and Jothidar Govindha Chetty (English)

Madras
the 15th February [1893]

Your Highness,

Two things I am telling your Highness. One—a very wonderful phenomenon I have seen in a village called Kumbakonam, and another about myself.

In the said village lives a man of the Chetty caste, generally passing for an astrologer. I, with two other young men, went to see him. He was said to tell about anything a man thinks of. So, I wanted to put him to the test. Two months ago, I dreamt that my mother was dead and I was very anxious to know about her. My second was whether what my Guru had told me was right. The third was a test-question—a part of the Buddhistic mantra, in Tibetan tongue. These questions I determined upon, two days before going to this Govinda Chetty. Another young man had one of his sisters-in-law given poison to, by some unknown hand, from which she recovered. But he wanted to know the author of that delivery.

When we first saw him, the fellow was almost ferocious. He said that some Europeans came to see [him] with the Dewan of Mysore and that since then through their ‘Dristee Dosham’ he had got fever and that he could not give us a seance then and only if we paid him 10 Rs., he would consent to tell us our ‘prasnas’. The young men with me of course were ready to pay down his fees. But he goes to his private room and immediately comes back and says to me that if I gave him some ashes to cure him of his fever he would consent to give us a seance. Of course I told him that I do not boast of any power of curing diseases but he said, ‘That does not matter, only I want [the ash]’. So, I consented and he took us to the private room and, taking a sheet of paper, wrote something upon it and gave it over to one of us and made me sign it and keep it into the pocket of one of my companions. Then he told me point blank, ‘Why you, a Sannyasi, are thinking upon your mother?’ I answered that even the great Shankaracharya would take care of his mother; and he said ‘She is all right and I have written her name in that paper in the possession of your friend’ and then went on saying, ‘Your Guru is dead. Whatever he has told you, you must believe, for he was a very very great man,’ and went on giving me a description of my Guru which was most wonderful and then he said ‘What more you want to know about your Guru?’ I told him ‘If you can give me his name I would be satisfied’, and he said, ‘Which name? A Sannyasi gets different sorts of names’. I answered, ‘The name by which he was known to the public’, and says, ‘The wonderful name, I have already written that. And you wanted to know about a mantra in Tibetan, that is also written in that paper.’ And, he then told me to think of anything in any language and tell him, I told him ‘Om Namo BhagavateVasudevaya’, and he said, ‘That is also written in the paper in possession of your friend. Now take it out and see’. And Lo! Wonder! They were all there as he said and even my mother’s name was there!! It began thus—your mother of such and such name is all right. She is very holy and good, but she is feeling your separation like death and within two years she shall die; so if you want to see her, it must be within two years.

Next it was written—your Guru Ramakrishna Paramahamsa is dead but he lives in Sukshma, i.e., ethereal body, and is watching over you, etc. and then it was written ‘Lamala capsechua’, in Tibetan, and then at last was written ‘In conformation to what I have written, I give you also this mantra which you would give me after one hour after my writing; ‘Om Namo Bhagavate etc.’; and so he was equally successful with my friends. Then I saw people coming from distant villages and as soon as he sees them he says—‘Your name is such and such and you come from such and such village for this purpose’. By the time he was reading me, he toned down very much and said—‘I won’t take money from you. On the other hand, you must take some “seva” from me’. And I took some milk at his house and he brought over his whole family to bow down to me and I touched some ‘vibhutee’ brought by him and then I asked him the source of his wonderful powers. First he would not say, but after a while he came to me [and] said—‘Maharaj, it is “siddhi of mantras” through the “sahaya” of “Devi”.’ Verily, there are more things on heaven and earth Horatio than your philosophy ever dreamt of—Shakespeare.

The second is regarding me. Here is a zamindar of Ramnath, now staying in Madras. He is going to send me over to Europe and, as you are already aware of, I have a great mind to see those places. So I have determined to take this opportunity of making a tour in Europe and America. But I can’t do anything without asking your Highness, the only friend on Earth I have.

So kindly give your opinion about it. I only want to make a short tour in those places. One thing I am certain of, that I am [an] instrument in the hands [of] a holy and superior power. Myself, I have no peace, am burning literally day and night, but somehow or other, wherever I go hundreds and, in some [places] as in Madras, thousands would come to me day and night and would be cured of their skepticism and unbelief but I—! I am always unhappy!! Thy will be done!! Therefore, I don’t know what this power requires of me, to be done in Europe. I cannot but obey. ‘Thy will be done’!! There is no escape.

I congratulate your Highness on the birth of a son and heir. May the infant prince be quiet like his most noble father and may the Lord shower his blessings always on him and his parents.

So I am going over in two or three weeks to Europe. I can’t say anything as to the future of the body. Only I pray to your Highness if it be proper to take some care of my mother that she does not starve.

I would be highly obliged to get a reply soon, and pray your Highness to keep the latter part of this letter, i.e., my going over to England etc., confidential.

May you be blessed all your life, you and yours, is the prayer that is day and night offered up by,

Vivekananda
C/o. M.Bhattacharya Esq.
Assistant Accountant General
Mt. St. Thome, Madras

Source: http://vivekananda.org/newSVLetters.asp

Tuesday, July 21, 2015

Meeting of Swami Vivekananda and Jothidar Govindha Chetty (Tamil)

ஜெய் ஸ்ரீ ராமகிருஷ்ணா

சுவாமி விவேகானந்தரின் கடிதம்

ராஜஸ்தான் மாநிலம் கேத்ரி சமஸ்தான மன்னர் ராஜா அஜித் சிங்கிற்கு எழுதியது.

சுவாமிஜியால் எழுதப்பட்ட இரண்டு கடிதங்கள் சமீபத்தில் ராஜஸ்தானில் உள்ள கேத்ரி மன்னரின் அரண்மனையில் உள்ள இணைபிரிவக அலுவலரின் அலுவலகத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டன அதில் ஒரு கடிதம் கும்பகோணம் பகுதியில் உள்ள வலங்கைமான் கிராமத்தில் சுமார் 122 வருடங்களுக்கு முன் ஜோதிடர் கோவிந்த செட்டியுடன் நிகழ்ந்த விசித்திர சம்பவம் பற்றியது ஆகும். இதனை தமிழாக்கம் செய்து வெளியிடுவதில் மிக்க பெருமிதம் கொள்கிறோம் இக்கடிதம் சுவாமிஜியின் 150வது ஜெயந்தியின் போது முன்னமே மாலை நாளிதழ் ஒன்றில் வெளியிடப்பட்டது அதன் திருத்திய பதிப்பினை கீழே காணலாம்.

மதராஸ் 15 பிப்ரவரி, 1893

மேன்மை மிகுந்த மன்னர் அவர்களுக்கு,
    இரண்டு நிகழ்வுகளை பற்றி நான் உங்களுக்கு தெரிவிக்க விரும்பிகிறேன். முதலாவது ஒன்று கும்பகோணம் என்ற கிராமத்தில் எனக்கு ஏற்பட்ட விசித்திர சம்பவத்தை பற்றியது. மற்றொன்று என்னைப்பற்றியது. நான் மேற்க்குறிப்பிட்ட கிராமத்தில் செட்டியார் சமூகத்தை சேர்ந்த, ஜோதிடத்தை தொழிலாகக்கொண்ட கோவிந்த செட்டியார் என்பவர் வாழ்ந்து வருகிறார். நான் என்னுடன் இரண்டு இளைஞர்கள் சகிதம் (அளசிங்கர் & மன்மதநாத்) அவரைக்காண சென்றேன். அச்சோதிடர் பிறர் மனதில் நினைக்கும் எதையும் அறியவல்ல ஆற்றல் உடையவர் (Mind reader) என்பதை அறிந்திருந்தேன். எனவே அவரை சோதனை செய்யவேண்டுமென மனதில் தீர்மானித்து இருந்தேன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னால் எனது தாயார் அகால மரணம் அடைந்துவிட்டது போன்ற கொடிய கனவினை நான் கண்டேன் அதனால் அதைபற்றிய குறிப்பினை அவரிடம் இருந்து அறிவதற்கு மிகுந்த வாஞ்சை கொண்டிருந்தேன். அடுத்து எனது குருநாதர் (ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்) எனக்கு போதித்தவை எந்த அளவுக்கு சாத்தியமானவை என்பதைபற்றியது; மூன்றாவது ஒரு சோதனை பூர்வமான கேள்வியை அடிப்படையாக கொண்டது. அது திபெத்திய மொழியில் அமைந்த புத்தமத மந்திரத்தில் வருகின்ற ஒரு பகுதியாகும். மேற்கண்ட சோதனை பூர்வமான கேள்விகளை நான் கோவிந்த செட்டியை சந்திப்பதற்க்கு இரண்டு தினங்களுக்கு முன்னரே மனதில் உறுதிப்படுத்திக்கொண்டேன். என்னுடன் வந்த மற்றோர் இளைஞரினுடைய (மூன்றாவது ஒருவர்) மைத்துனிக்கு இனம்காண முடியாத சிலரால் இடுநஞ்சு கொடுக்கபட்டு பின்னர் குணப்படுத்தபட்டாள். எனவே அவ்விளைஞர் விஷத்தினை கொடுத்தது யார் என்பதை ஜோதிடரிடம் அறியும் பொருட்டு எங்களோடு வந்திருந்தார்.

முதன் முறையாக அச்ஜோதிடரை சந்தித்தபோது அவர் மிகவும் ஆக்ரோஷமான மனநிலையில் காணப்பட்டார். சமிபத்தில் எங்களுக்கு முன்னதாக சில ஐரோப்பிய கனவான்கள் மைசூர் திவானுடன் சேர்ந்து ஜோதிடரைக்காண வந்திருந்ததாகவும், அதனால் தனக்கு திருஷ்டி தோஷமும் காய்ச்சலும் ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தார். எனவே தற்போதைய தனது நிலையில் எங்களுக்கு ஆரூடம் கூறயியலாது; எனவே எனக்கு சேவை கட்டணமாக ரூபாய் பத்து செலுத்த வேண்டும் என்றார். என்னுடன் இருந்த சக இளைஞர்கள் அவர் கேட்ட அத் தொகையை அவரிடம் அளிக்க நிச்சயமாக ஆயத்தநிலையில் இருந்தனர். ஆனால் அப்போது உடனே அவர் தனது அறைக்கு சென்று திடிரென என்னை நோக்கி திரும்பி வந்து, எனது காய்ச்சலை குணப்படுத்துவதற்கு தங்களது கையினால் விபூதி இட்டளிக்க வேண்டும் எனவும் பின்னரே எங்களுக்கு குறிசொல்ல இயலும் என்றார். அதற்கு நான் என்னிடம் அத்தகைய அதீதமான ஆற்றல்கள் ஏதும் இல்லை என்றேன். ஆனால் அவர் எனது பேச்சினை இடை மறித்து “எனக்கு வேண்டியது எல்லாம் தங்களிடமிருந்து திருநீறு மட்டுமே” என்றார், நானும் அதற்கு இசைய. எங்களை அவரது தனி அறைக்கு அழைத்து சென்று ஒரு காகிதத்தில் ஏதோ எழுதி அதை எங்களில் ஒருவரின் சட்டைப்பையில் பத்திரபடுத்துமாறு பணித்தார். பிறகு சற்றே மௌனம் சாதித்தவாறு இருந்துவிட்டு என்னை நோக்கி, “துறவியாகிய தாங்கள் தங்களது அன்னையை பற்றியே இன்னமும் ஏன் எண்ணுகிறீர்கள்?” என வினவினார். அதற்கு நான், “ஏன் மகான் ஆதிசங்கரர் கூட தனது அன்னையை பற்றிய நலனில் அக்கறை கொண்டிருக்கவில்லையா?” என்று மறுமொழி உரைத்தேன்.

அதன்பின் என்னிடம் அவர், உங்களது அன்னையார் நலமாகவே இருக்கிறார் நான் உங்களது அன்னையின் பெயரினை உங்களது நண்பரிடம் கொடுத்துள்ள காகிதத்தில் எழுதி உள்ளேன் என்றார். மேலும் தொடர்ந்து அவர் என்னிடம் உங்களது குரு மகாசமாதியை அடைந்துவிட்டார். அவரது உபதேசங்களை நீங்கள் நிச்சயமாக நம்பியே தீரவேண்டும்; ஏனெனில் அவர் மிகபெரிய மகான் ஆவார் என்றெல்லாம் எனது குருவை பற்றிய மேற்கோள் காட்டியது எனக்கு மிகவும் ஆச்சர்யத்தை உண்டாக்கியது. அவர் என்னிடம் உங்களது குருவை பற்றிய கூடுதலான தகவல்களை தெரிவிக்கட்டுமா? என்று கேட்டார். அதற்கு நான் அவரிடம் எனது குருவின் தூய திருநாமத்தினை எனக்கு கூறினால் திருப்தியடைவேன் என்றேன். அதற்கு அவர் மறுமொழிகையில் எந்த பெயரினை குறிப்பிடவேண்டும். பொதுவாக ஒரு குருவிற்கு பல திருநாமங்கள் உள்ளன என்றார். நான் அவரிடம் பொதுமக்களெல்லாம் எந்தபெயரினால் அவரை அழைக்கின்றனரோ அந்த பெயரையே கூறுங்கள் என்றேன். அதற்கு அச்சோதிடர் அவரது திருநாமம் மிகவும் திவ்யமானது, புனிதமானது, அதி அற்புதம் வாய்ந்தது. அதையும்கூட உங்களது நண்பரின் சட்டைப்பையில் உள்ள காகிதத்தில் முன்னமே எழுதியுள்ளேன். அடுத்ததாக, தாங்கள் அறியவிரும்பிய திபெத்திய மொழி மந்திரத்தையும் அக்காகிதத்தில் கூடவே குறிபிட்டுள்ளேன் என்றார். தொடர்ந்த உரையாடலில் என்னிடம் இப்பொழுது நீங்கள் எந்தமொழியிலாவது அமைந்த எந்தசொல் ஆனாலும் அதை நினைத்துகொள்ளுங்கள் என்றார். நான் "ஓம் நமோ பகவதே வாசுதேவாய" என்றேன். அதற்கு அவர் ஓ அதைகூட காகிதத்தில் குறித்துள்ளேன் என்றார். வேண்டுமானால் அதை இப்பொழுதே எடுத்து சோதித்துகொள்ளுங்கள் என்றார். நானும் அக்காகிதத்தினை உற்று நோக்கி மிகவும் ஆச்சர்யமுற்றேன். அவர் சொன்னபடி அனைத்து குறிப்புகளும் அப்படியே இருந்தன எனது அன்னையை பற்றிய விஷயங்கள் உட்பட. எனது தாயை பற்றி விவரிக்கையில் உங்களது தாய் மிகவும் புனிதமானவர், மிகவும் உயர்ந்தவர். தங்களது பிரிவு அவரை மரணபிரிவு போன்றதொரு துயரத்தில் ஆழ்த்தியுள்ளது அவர் இன்னும் இரண்டு வருடங்களில் இறந்துவிடுவதற்கான சாத்தியகூறுகள் இருக்கின்றன; எனவே அவரை வரும் இரண்டு வருடங்களுக்குள் நேரில் சென்று காணுங்கள் என்று தெரிவித்தார்.

நான் தொடர்ந்து காகிதத்தில் அவர் குறித்துள்ளவற்றை கவனித்தேன் அதில் எனது குரு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி அடைந்து விட்டார் எனினும் சூட்சமநிலையில் என்னை கவனித்து வருகின்றார் என்றும்; திபெத்திய மொழியில் அமைந்த மந்திரச்சொல்லான "லாமாலா காப்சேசுவா" என்பதும், நான் அவரிடம் இறுதியாக கூறிய "ஓம் நமோ பகவதே வாசுதேவாய" என்ற மந்திர சொல்லும், நான் அவரிடம் சொல்லுவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னதாகவே காகிதத்தில் எழுதபட்டிருந்தது. என்னை பெரும் வியப்பில் அழ்த்தியது. இவ்வாறு என்னுடன் வந்த எல்லா நண்பர்களையும் ஒட்டுமொத்தமாக வியப்பில் அழ்திவிட்டார். அதேசமயத்தில் அப்பொழுது அங்கு தொலைவில் உள்ள கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பலர் அவரை நோக்கி வரலாயினர். அச்சோதிடர் ஒவ்வொருவரையும் தத்தம் அவர்களது பெயரையும், கிராமத்தையும் வந்த காரணத்தையும் அவர்களுக்கு முன்னதாகவே குறிப்பிட்டார் அதேவேளையில் என்னையும் மனக்கண்னோட்டம் (Mind Reading) இட்டார். பின்னர் என்னிடம் சற்றே பணிந்த குரலில் உங்களிடம் இருந்து எனக்கு கட்டணம் எதுவும் வேண்டியது இல்லை.

அதேசமயம் தாங்கள் நான் செய்யும் ஒரு சிறு சேவையை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க பின்னர் அவரது வீட்டில் இருந்து சிறிது பாலினை அருந்தினேன். பிறகு அவரது (கோவிந்த செட்டி) குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் என்னை சாஷ்ட்டாங்கமாக நமஸ்கரித்தனர். பின்னர் ஜோதிடர் தாம் கொண்டுவந்த திருநீற்றை என்னிடம் கொடுத்து அவர்கள் அனைவருக்கும் பூசிவிடுமாறு பணித்தார். நானும் அவ்வாறே செய்தேன். பின்பு தனியாக அவரிடம் தங்களுக்கு இத்தகைய அதீத சக்தி எப்படி வந்தது என்று வினவினேன். முதலில் அவர் பதில் கூறவில்லை பிறகு சிறிது நேரம் கழித்து என்னிடம் மகராஜ் இந்த் ஆற்றல் எனக்கு கிட்டியதற்கு தேவி அருளிய ஸித்தி மந்திரங்கள் உபாசனைகளே காரணமாகும் என்றார்.

"காலமாக இருக்கும் இறைவா" (Horatio) நிச்சயமாக விண்ணிலும் மண்ணிலும் உனது தத்துவங்கள் கனவிலும் காணமுடியாதபடி பெரும் வியப்பாய் உள்ளன"
-    வில்லியம் ஷேக்ஸ்ப்பியர்

தங்களது
சுவாமி சச்சிதானந்தா (சுவாமி விவேகானந்தா)
C/O மா. பட்டாச்சார்யா
இணை பொது கணக்காளர்,
சாந்தோம்,
மதராஸ்.


கடித ஆதாரம்: 

Thursday, June 18, 2015

Friday, May 29, 2015

What is the difference between

I like you &
I love you


When you like a flower, you just pluck it!
But when you love a flower, you water it daily!

Sunday, May 3, 2015

சன்யாஸி கீதம்

1. எழுக வலிமிகு வீரத் துறவியே
இனிய சுரத்தில் அமிழ்ந்திடு
பணித்த மலைக்குகை கருத்தவனத்திடை
யாவும் அதனில் பிறப்பது
காசும் காமமும் பேரும் புகழும் அந்த
அமைதியைக் குலைக்குமோ?
உலகின் வெகுதொலை புவனத்தளைகள்
யாதுமதனை எட்டுமோ?
அறிவு மெய் எனும் இரண்டும் சேர்ந்தொரு
ஆனந்தநதி பாய்ந்திடும்
உயர்ந்த சுரத்தினை உறுதிடத்துடன்
முழங்கு சன்யாஸி -- ஓம் தத்சத் ஓம்

2. நிலைத்த உறுதிகொள் வீரத்துறவி!
கீழ்மைத் தளைகளைத் தகர்த்திடு
மின்னும் பொன்னோ கரிய இரும்போ
தளைகள் தளைகளே என்றறி
நன்மை-தீமை,அன்பு-வெறுப்பு இருமை
யாவும் கட்டுக்கள்
அன்பு புரிகினும் அடித்து நொறுக்கினும்
அடிமை அடிமையே வேறிலை
தங்கத்தளையதுவாயினும் அது
பிணைக்கும் வலிவில் குறைவில்லை
உடைத்து ஏறி அதை உருதிடத்துடன் வீர
சன்யாஸி -- ஓம் தத்சத் ஓம்

3. கொள்ளிவாய்ப் பேய் சிமிட்டி ஒளிர்ந்து
அடர்ந்த காரிருள் சேர்த்திடும்
அடைய இயலா இழக்காது அந்த அடரும்
இருளை விளக்கிடு
பிறந்து இறத்தலும் இறந்து பிறத்தலும்
ஆசையாலே விளைவது
நிறைவு அற்ற இதனை ஒழிப்பின் கொடிய
இருள் மாய்ந்தோடிடும்
தன்னை வெற்றி கொள்பவனே
அனைத்தும் வெற்றி கொள்கிறான்
இதனையறிந்து இணங்கிடாது
முழங்கு சன்யாஸி -- ஓம் தத்சத் ஓம்

4. வினை விதைத்தவன் அதையறுப்பான்
நன்மை விதைத்தவன் நன்மையையும்
தீது விதைத்தவன் தீதறுப்பான்
யாரும் விதிவிலக்கில்லையே
எங்கு காரணம் என்று உள்ளதோ
அங்கு காரியம் உள்ளது
உருவெடுப்பவன் தளைபுனைவான்
விதியின் லீலை நிச்சயம்
உருவும் பெயரும் கடந்து நிற்பது
என்றும் சுதந்திர ஆன்மமே
அதுவே நீயென உணர்ந்தறிந்து
முழங்கு சன்யாஸி -- ஓம் தத்சத் ஓம்

5. தந்தை தாயென மழலை மனைவி
நண்பன் என்றென நினைப்பவர்
வெற்று கனவுகள் காண்பவர் அவர் அறுதி
உண்மையை அறிகிலர்
பாலெனும் ஒரு பகுப்பு இல்லா ஆத்மன்
யாருக்கு தந்தை தாய்
நண்பன் யாரோ, பகைவன் யாரோ,
யாரின் குழந்தையாவது
நீக்கமறவே நிறைந்த ஆன்மா
அன்றி வேறொன்றிங்கிலை
‘தத்வமசி’ யென உணர்ந்தறிந்து
முழங்கு சன்யாஸி -- ஓம் தத்சத் ஓம்

6. யாவுமறிந்த ஆத்ம னென்பது
ஏகமாயெங்கும் நிறைந்தது
பேரிலாதது உருவிலாதது
களங்கமற்றது ஒன்றதே
ஆத்மனுள் திகழ்மாயையே
இந்த மாறுங்கனவுகள் காண்பது
காட்சியாயிந்த ஜீவனாய்
ஒரு சாட்சியாயது நிற்பது
அந்த தூய பொருளே நீயேனும்
அனுபவத்தை அடைந்திடு
அதுவே நீயென உணர்ந்தறிந்த பின்
முழங்கு சன்யாஸி -- ஓம் தத்சத் ஓம்

7. எங்கு எங்கோ தேடுகின்றாய்
உற்ற சுதந்திரம் தன்னையே
இந்த உலகம் ஈந்திடாது,
நண்பனே இதை கேட்டிடு !
கற்ற நூலிலும் இறைவன் மனையிலும்
தேடுதல் அது வீண் செயல்
உன்னை மாய்க்கும் பாசக்கயிறை
பற்றியுள்ளது உன்கரம்
பிடியை உதறித் தள்ளிடு
நீ புலம்பும் துயரை ஒழித்திடு
பற்றை நீக்கி உறுதிடத்துடன்
முழங்கு சன்யாஸி -- ஓம் தத்சத் ஓம்

8. மங்களம் இனி எங்கும் என்று
யாண்டும் நீ பறைசாற்றிடு
‘தீமை என்னால் உயிருக்கில்லை’
என்று உலகிற்குணர்த்திடு
உயர்ந்தவிடத்தும் தாழ்ந்தவிடத்தும்
மேவி உள்ள ஆத்மன் நான்
இம்மை-மறுமை, சொர்க்கம்-நரகம்,
ஆர்வம்- அச்சம் அனைத்தையும்
உழலும் உலகம் விடுத்து யாவும்
துறந்து பாரில் நின்றிடு
பந்த பாசத்தை வெட்டியெறிந்து
முழங்கு சன்யாஸி -- ஓம் தத்சத் ஓம்

9. வீழினும் உடல் வாழினும்
அதை மதித்திடாதிரு துறவியே
தேகப்பணியும் முடிந்தது அதை
கர்ம வெள்ளம் இயக்கட்டும்
ஒருவர் மாலை சூட்டட்டும்
இன்னொருவர் உடலை உதைக்கட்டும்
புகழ்பவர் – புகழப்படுபவர்
இகழ்பவர் – இகழப்படுபவர்
அனைத்தும் ஒன்றே, உன்னை
அவை தீண்டிடாது என்றறி
மனதில் பூரண அமைதி கொண்டு
முழங்கு சன்யாஸி -- ஓம் தத்சத் ஓம்

10. எங்கு காமமும் பெயரும் புகழும்
ஆசை நினைவுகள் உள்ளதோ
உண்மை ஞான ஒளியின் கிரணம்
அங்கு விழுவது இல்லையே
பெண்ணை மனைவியென்னும்
எண்ணம் பூரணத்தைக் குலைத்திடும்
சொற்ப பொருளும் அற்ப கோபமும்
மாயக்கதவை மூடிடும்
மாயக் கதவை உடைத்திடு
நீ நேய ஆத்மனை அடைந்திடு
தூய மனத்துடன் உறுதிடத்துடன்
முழங்கு சன்யாஸி -- ஓம் தத்சத் ஓம்

11. வீடு உனக்கு இல்லை நண்ப
எந்த வீடுனை தாங்கிடும்
வானமே உன் கூரையாகும்
கோரைப்புல்லே மெத்தையாம்
நன்று தீதென ருசித்திடாமல்
கிடைத்த உணவை உண்டிடு
தன்னைத் தானே அறியும் ஆத்மனை
அன்ன பானம் என் செய்யும்
உருண்டு ஓடும் தூயநதிபோல்
திரண்டு விடுதலை பெற்றிடு
வெற்றி நமதே என்று எங்கும்
முழங்கு சன்யாஸி -- ஓம் தத்சத் ஓம்

12. உண்மை பொருளை சிலரேயறிவர்
மற்றவர்கள் தூற்றுவர்
எள்ளி நகைப்பர். ஆயினும் அதை
செவி மடுத்தாதிருந்திடு
என்றும் சுதந்திரனாய் இரு பலர்
மாயைத் திரையை அறுத்திடு
துன்பம் கண்டு அஞ்சிடாமலும்
இன்பந்தன்னைத் தேடிடாமலும்
இருமையிவைகளை விடுத்து நீயும்
கடந்து மேலே சென்றிடு
உறுதிடத்துடன் ஆன்ம பலத்தை
முழங்கு சன்யாஸி -- ஓம் தத்சத் ஓம்

13. கருமத்தளைகள் முழுமையாக
நீங்கும் வரையில் உழைத்திடு
முயற்சி மூலம் ஆத்மனுக்கு
சுதந்திரத்தை அளித்திடு
பிறவியில்லை மனிதமில்லை
தெய்வமென்றொன்றில்லையே
நீயுமில்லை நானுமில்லை ஆத்மன்
ஒன்றே நிலைப்பது
எங்கும் நானே, நானே எங்கும் என்ற
உண்மையை உணர்ந்திடு
அந்த ஆனந்த நிலையை அடைந்து
முழங்கு சன்யாஸி -- ஓம் தத்சத் ஓம்

Thursday, August 21, 2014

Talk to yourself...

Talk to yourself once in a day, otherwise you may miss meeting an excellent person in this world.

Friday, August 31, 2012

Always say, “I have no fear.”

Avoid excessive merriment. A mind in that state never becomes calm; it becomes fickle. Excessive merriment will always be followed by sorrow. Tears and laughter are near kin. People so often run from one extreme to the other.

Be a hero. Always say, “I have no fear.” Tell this to everyone-“Have no fear.”

-Swami Vivekananda

Tuesday, June 5, 2012

Sai Baba's twelve assurances to his devotees

Sai Baba made twelve assurances to his devotees:

1. Whosoever puts their feet on Shirdi soil, their sufferings will come to an end.
2. The wretched and miserable will rise to joy and happiness as soon as they climb the steps of [the mosque] Dwarakamayi.
3. I shall be ever active and vigorous even after leaving this earthly body.
4. My tomb shall bless and speak to the needs of my devotees.
5. I shall be active and vigorous even from my tomb.
6. My mortal remains will speak from my tomb.
7. I am ever living to help and guide all who come to me, who surrender to me, and who seek refuge in me.
8. If you look at me, I look at you.
9. If you cast your burden on me, I shall surely bear it.
10. If you seek my advice and help, it shall be given to you at once.
11. There shall be no want in the house of my devotee.
12. If you take a step towards me, I will take 100 steps towards you.

-Sai Baba